Menu
Your Cart

வெல்கம் டு மில்லெனியம்

வெல்கம் டு மில்லெனியம்
-5 %
வெல்கம் டு மில்லெனியம்
அரவிந்தன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை. இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள் அவர்களுடைய அகத்திற்குள் கச்சிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளுக்குள் இவர்கள் அதிர்வின்றி நழுவிச் செல்கிறார்கள். இந்த மாற்றத்தை அரவிந்தன் கச்சிதமான வரிகளில் உணர்த்திச் சொல்கிறார். மிகுதியும் உளவியல் தன்மை கொண்ட இந்தக் கதைகளை உளவியல் கோட்பாடுகளின் வழியே பார்க்கையில் புதிய கோணங்கள் தோன்றினாலும், இந்தக் கோட்பாடுகளில் மதிப்போ ஆர்வமோ இல்லாதவர்களும் நெருக்கமாக உணரக்கூடிய வகையில் இந்தக் கதைகள் உள்ளன
Book Details
Book Title வெல்கம் டு மில்லெனியம் (welcome to millenium)
Author அரவிந்தன் (Aravindhan)
ISBN 978-81-19034-32-1
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹275
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சி..
₹133 ₹140
இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின்கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட..
₹214 ₹225
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழி..
₹119 ₹125